தெ ன்மராட்சி கைதடி மக்களின் நீண்டகால தேவையான குடிநீர்த் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
(படங்கள் இனைக்கப்பட்டுள்ளன)
இன்று மாலை கைதடியிலுள்ள நீர்வழங்கல் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் டினேஷ் குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டு நீர்விநியோக திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கைதடி அபிவிருத்திக்குழு செயலாளர் மோகனரூபன் தமது கிராமத்தின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர்வசதியை ஏற்படுத்தித் தந்தமைக்கு கைதடி மக்களின் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா மற்றும் நீர்வழங்கல் பகுதி அதிகாரிகள் ஆகியோருடன் பொதுமக்களும் பங்குகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’