கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை துறைநீலாவனை பகுதியிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவர் கைது செய்யப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 500 கிராமிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். இந்நிலையில் மேலதிக விராரணைகள் தொடர்கின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’