வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 அக்டோபர், 2010

சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவுக்கு ஜனாதிபதி ஆட்சேபம்

னாதிபதி தேர்தல் முறைகேடு தொடர்பான ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக் காலத்தை ரத்து செய்யுமாறு தெரிவித்து சரத் பொன்சேகா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், இந்த மனுவை நிராகரிக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றில் ஆட்சேப மனுவொன்றை தமது சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றில் இந்த ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலில் மோசடிகளோ அல்லது முறைகேடுகளோ நடைபெற்றமைக்காக எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது என ஜனாதிபதி தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் சட்ட மூலத்தின் அடிப்படைத் தேவைகளை சரத் பொன்சேகா பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகவும் இதனால் தேர்தலை சூன்யமாக்கி தம்மை ஜனாதிபதியாக அறிவிக்குமாறு சரத் பொன்சேகா கோரியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகிசய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டதாக போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்காஹே உள்ளிட்ட பலர் தேர்தல் தினமன்று அரச ஊடகங்களில் தமக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும் சரத் பொன்சேகா தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’