வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 அக்டோபர், 2010

வெள்ளைக்கொடி வழக்கு ; தான் குற்றமற்றவர் என பொன்சேகா தெரிவிப்பு

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
.இன்று நடைபெற்ற ட்ரையல் அட் பார் விசாரணையின்போது, அவர் குற்றவாளியா, சுத்தவாளியா என பொன்சேகாவிடம் வினப்பட்டது. அப்போது தான் குற்றவாளியல்ல என பொன்சேகா பதிலளித்தார்
அதையடுத்து, சண்டே லீடர் பத்திரிகையின் பத்திரிகை ஆசிரியரான பிரெட்ரிகா ஜேன்ஸ் சாட்சியமளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
'ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அத்தேர்தலில் வேட்பாளரான சரத் பொன்சேகாவின் வாழ்க்கைக் குறிப்பை தொகுப்பதற்காக அவரை செவ்வி காணத் திட்டமிட்டேன்.
அச்செவ்வியின் இறுதியில் போரின் கடைசிக் கட்டத்தில் என்ன நடந்தது என கேள்வியொன்றைக் கேட்டேன்.
அப்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் குழுவொன்று சரணடைய வருவதாகவும் அவர்களை சரணடையவிடாமல் சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டதாக தனக்கு தகவல் கிடைத்தது என பொன்சேகா கூறினார்.
அது பரபரப்பான தகவல் என்பதால் அதை அவ்வார சண்டே லீடர் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக்குவதற்குத் தீர்மானித்தேன். அச்செய்தியை வெளியிடுவதற்கு முதல்நாள் சரத் பொன்சேகாவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்தேன். அவர் பிரச்சினை இல்லை என்றார்.
இவ்விடயம் குறித்து பிரிகேடியர் சவீந்திர சில்வா மற்றும் அப்போதைய இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் இம்சம்பவத்தை நிராகரித்தனர் என்றார்.
இவ்வழக்கு மீண்டும் நாளை மறுதினம் விசாரிக்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’