காமன்வெல்த் போட்டியின்போது அக்டோபர் 12, 13 ஆகிய இரு நாட்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த அல் கொய்தாவும், லஷ்கர் இ தொய்பாவும் திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த இரு நாட்களிலும் போட்டிநடந்த சில மைதானங்களில் தாக்குதல் நடத்த இந்த இரு தீவிரவாத அமைப்புகளும் திட்டமிட்டிருந்தனவாம். இதையடுத்து கடைசி மூன்று நாட்களிலும் சத்தமின்றி பாதுகாப்பை பலமடங்கு உயர்த்தி இந்த தாக்குதல் சதித் திட்டத்தை மத்திய அரசு முறியடித்துள்ளது.
இதுதவிர சீனாவிலிருந்து வைரஸ்களைப் பரப்பி பாதுகாப்புத்துறையினரின் கம்ப்யூட்டர் கட்டமைப்புகளை சீர்குலைக்கவும் சதி நடந்துள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டி தொடர்பான கம்ப்யூட்டர் வலையமைப்பையும் முற்றிலும் சீர்குலைக்கவும் சதி நடந்துள்ளது. ஆனால் இதையும் இந்தியா திறம்பட சமாளித்து முறியடித்துள்ளது.
அல் கொய்தா, லஷ்கர் தாக்குதல் சதித் திட்டம் குறித்து மேற்கத்திய நாடு ஒன்றுதான் இந்தியாவை உஷார்படுத்தியுள்ளது. இந்த தீவரவாதிகளுக்கு ஆப்கன-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வைத்து தீவிர பயிற்சி கொடுத்துள்ளனர். ஒரு ஹோட்டலையும்,சில போட்டி இடங்களையும் இவர்கள் தாக்கலாம் என இந்தியாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கேம்ஸ் வில்லேஜ் உள்பட அனைத்து இடங்களிலும் மத்திய அரசு பாதுகாப்பை பலமடங்கு அதிகரித்து விட்டது. அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். கூடுதல் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் கூட ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாம்.
இந்தியாவின் இந்த சுதாரிப்பான நடவடிக்கை காரணமாக தீவிரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’