வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 அக்டோபர், 2010

வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா

பூங்காற்று திரும்புமா. இது வெறும் பாடல் மட்டுமல்ல, ஒவ்வொரு இளையராஜா ரசிகரும், ஒவ்வொரு வைரமுத்து ரசிகரும் நீண்ட காலமாக தங்களுக்குள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி. இது வேள்வியாகவே மாறிப் போய் இன்று வரை விடை தெரியாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சகாப்தம் உருவாக்கப்படும். அப்படி உருவான ஒரு சகாப்தம்தான் இளையராஜா. அவரது இசையிப் பட்டுத் தெறிந்தத பாடல் வரிகள் என்றுமே சோடை போனதில்லை. அதில் முக்கியமானவர் வைரமுத்து.
ராஜாவும், வைரமுத்துவும் இணைந்து கொடுத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை. இன்று வரை இதயங்களை குளிர்வித்து, குஷிப்படுத்துபவை. ஆனால் அதெல்லாம் ஒரு காலம் என்றாகி விட்டது.
பிரிந்து போன அந்த பிரம்மாக்கள் இணையும் வழியைக் காணோம். இடையில் இருவரும் இணையப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அது, ராஜாவின் குரலில் வைரமுத்துவின் பாடல். இந்த அதிசயத்தை நடத்தியிருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். இந்த்ப பாடல்தான் படத்தின் ஹைலைட் பாடலாக இருக்குமாம்.
இந்தப் பாடலை தனது தந்தையே பாடினால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த யுவன், இளையராஜாவிடம் சொல்ல, சற்றும் மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாடிக் கொடுத்துள்ளாராம் ராஜா.
பேனாவும், ராஜாவின் குரலும் இணைந்தது போல இருவரும் நேரடியாக இணைந்து முடங்கிப் போன அந்த பூங்காற்றை மீண்டும் விடுவித்து, புழுங்கிப் போன மனங்களுக்குப் புத்துயிர் கொடுப்பார்களா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’