ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கின்றார் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டள்ளன)
யாழ்ப்பாணத்தில் தசைநார் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எமது இளைய சமுதாயம் உடல் உள ரீதியாக மட்டுமல்ல இதுபோன்ற உடற்பயிற்சி மையங்கள் ஊடாக வலிமையுள்ள ஆரோக்கியமான சமூகமாக உருவாக வேண்டும்.
அவ்வாறானதொரு இளைய சமுதாயத்தை எதிர்காலத்தில் கட்டி வளர்த்து, அவர்கள் மூலமாக நல்லதொரு வளமான சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே அமைச்சர் அவர்களின் விருப்பமாகவுள்ளது.
அதற்காக அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் என்பதுடன் இனிவரும் காலங்களில் இதுபோன்ற பயிற்சி நிலையங்களை நவீன மயப்படுத்தப்பட்டு அதனூடாக தேக ஆரோக்கியமிக்கதான வலுவுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.
யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அண்மையாக இந்த தசைநார் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மாவட்ட விளையாட்டுத் துறைக்கென இந்நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநகர ஆணையாளர் சரவணபவ உள்ளிட்ட வீர வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’