வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 அக்டோபர், 2010

கிளிநொச்சிச் சந்தை நிரந்தர இடத்தில் அமைக்கப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

கிளிநொச்சி சந்தையை நிரந்தர இடத்திலேயே வைத்து அபிவிருத்தி செய்யவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம்(16) கிளிநொச்சி அரச செயலகத்தில் சந்திரகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கிளிநொச்சி சந்தை விவகாரம் மற்றும் பிரதேச சபைகள் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் கிளிநொச்சி பொதுச் சந்தை கடந்த காலங்களில் பல இடங்களில் செயற்பட்டு வந்திருக்கிற நிலையில் தற்போது சந்தை கிளிநொச்சி அம்பாள் நகரில் இயங்கி வருகிறது. மாவட்டத்தின் முதன்மைச் சந்தையான இந்தச் சந்தையை நிரந்தர இடத்தில் அமைப்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுத்து நடைமுறைப்படுத்தியது வரை எம்முடன் இதுதொடர்பாக முன்னேற்பாடாக கலந்துரையாடப்படவில்லை. ஆனால் மீளக்குடியேறியுள்ள வர்த்தகர்கள் சந்தையில் மீண்டும் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சந்தையை வேறு இடங்களுக்கு நகர்த்துவது பொருத்தமற்றது. ஆகவே நகர விரிவாக்கல் திட்டத்தின் அடிப்படையில் இப்போதுள்ள இடத்தில் சந்தையை அபிருத்தி செய்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அத்தோடு சந்தை தொடர்பில் பிரதேசசபை நடந்துகொண்ட முறைகளில நிறைய அதிருப்த்திகள் உள்ளன இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதேவேளை புதிய சந்தை காரணமாக தங்களுடைய காணிகளை இழந்த பதின்மூன்று குடும்பங்களுக்கும் நியாயமான முறையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுபினர் அவர்களால் வலியுறுத்தப்பட்டது அதனடிப்;படையில் அந்த பதின்மூன்று குடும்பங்களுக்கும் வீட்டுத்திட்டத்துடன் கூடிய காணிகள் சந்தையை அண்டிய பிரதேசங்களில் வழங்குவதோடு சந்தைத் தொகுதியில் முன்னுரிமையாக வியாபார நிலையமும் வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து தொடர்பான விடயத்தில் தனியார் போக்குவரத்து துறையின் குறுந்தூர சேவைகள் அனைத்தையும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து செயற்படுத்துமாறும் நீண்ட தூர சேவைகளை (கிளிநொச்சி-யாழ்ப்பாணம் கிளிநொச்சி-வவுனியா போன்ற சேவைகளை) பழைய சந்தையின் உட்புறத்திலிருந்து செயற்படுத்துமாறும் இனிமேல் வீதியில் வைத்து சேவைகளை மேற்கொளள வேண்டாம் எனவும் வலியுத்தப்பட்டது.

கூட்டுறவுச்சங்கங்களின் செயற்பாடுகள் தொடர்பான விடயத்தில் காலத்திற்கேற்ப செயற்பாடுகளை கொண்டு நடத்த வேண்டும் என்றும் இம்மாவட்ட கூட்டுறவுச்சங்கங்களுக்கு ஐந்து அரைக்கும் ஆலைகளை ஒன்பது மில்லியன் ரூபாக்களில் எதிர்வரும் ஐனவரி மாதத்தில் அமைத்து தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்; தெரிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் மாட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளுராட்சி கூட்டுறவு அமைச்சின் செயலாளர் திருமதி விஐயலட்சுமி உள்ளுராட்சி ஆணையாளர் திரு பி.ஜோன்சன் கண்டாவளை பளை பிரதேச செயலளர்களான திரு சத்தியசீலன் திரு முகுந்தன் கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரதேசசபை செயலாளர்கள் கூட்டுறவுச்சங்க உத்தியோகத்தர்கள் வர்த்தகர் சங்கத் தலைவர் அம்பாள்குளம் கிராம அபிவிருத்திச சங்கத் தலைவர் கிராம அலுவலர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’