வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 அக்டோபர், 2010

அனுமதியின்றி நடாத்திச் செல்லப்பட்ட வானொலி நிலையம் பொலிஸாரால் முற்றுகை

ல்பிட்டி பொலிஸ் நிலைய பிரதேசத்தில் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியின்றி நடாத்திச் செல்லப்பட்ட வானொலி நிலையம் ஒன்றினை இன்று பிற்பகல் கல்பிட்டி பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.

சிகரம் எப்எம் எனும் பெயரில் கல்பிட்டி பிரதேசத்திற்கு மாத்திரம் ஒலிபரப்பை மேற்கொண்டு வந்த இந்த வானொலி நிலையம் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்பிட்டி நகரின் கடை ஒன்றினுள் இந்த வானொலிச் சேவை நடாத்தப்பட்டுள்ளது. கல்பிட்டி பொலிசார் இந்நிலையத்தினை முற்றுகையிட்டு அங்கிருந்த கணினி உட்பட உபகரணங்கள் பலதையும் கைப்பற்றியதோடு, சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த வானொலி நிலையம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’