வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 அக்டோபர், 2010

கதிர்காமர் கொலை வழக்கு:ஆயுதங்களை சம்பவ இடத்திற்கு கொணர்வதற்கு ஆட்சேபம்

க்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட இடத்திலேயே நடைபெறவிருக்கும் விசாரணையின்போது, கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதத்தையும் முக்காலித் தாங்கியையும் அவ்விடத்திற்கு கொண்டுவரும்படி பிரதிவாதியின் சட்டத்தரணி கோரியதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மேல் நீதிமன்றில் ஆட்சேபம் தெரிவித்தனர்
.இப்படிக் கோருவதற்கு சட்டத்தில் இடமில்லை என மனுதாரர் தரப்பு சட்டத்தரணி கபில விஜயவர்த்தன விவாதித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வெளியே நீதிமன்றம் கூடுமாயின் அங்கு சான்றுகளை கொண்டுவரக் கோருவது சரியே என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி தவராசா கூறினார்.
இவரது வாதத்தை கருத்திலெடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வுப் பிரிவினரை தமது வாதத்தை ஒக்டோபர் 28ஆம் திகதி தொடருமாறு பணித்தார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முதலில் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட 6 பேரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டனர். பின்னர் குற்றச்சாட்டை திருத்தியமைத்து முத்தையா சகாதேவன், இஷினோர் ஆரோக்கியநாதன் ஆகிய இருவரை மட்டுமே பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’