18ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐ.தே.க. வின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை கட்சியிலிருந்து நீக்குவதை தடுக்கக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்
.ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான உபேஷா சுவர்ணமாலி, காலி மாவட்ட எம்.பி.யான மனுஷ நாணயக்கார ஆகியோரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து தம்மை விலக்குவது மக்கள் தெரிவையும் தமக்கு மக்கள் அளித்த ஆணையையும் மறுதலிப்பதாக அமையும் என்று அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தாம் கட்டாயத்தின் பேரில் திகதியிடாத கடிதத்தில் கையொப்பமிட்டதாகவும், இதனால் இக்கடிதங்கள் சட்டவலுவற்றவை என்றும் இவர்கள் தமது வழக்கில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்ட நீதிவான் டபிள்யூ. ஆர்.எம். வதுகல வழக்கு விசாரணை முடியும் வரை மனுதாரர்களை ஐ.தே.க.வில் இருந்து நீக்குவதற்கு தடை விதித்துள்ளார்.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’