வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 அக்டோபர், 2010

49 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய வாழைச்சேனை மீனவர்கள் மூவர்

வாழைச்சேனை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மூன்று மீனவர்கள், 49 தினங்களுக்கு பின்பு நேற்று புதன்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளனர்
.கடந்த ஓகஸ்ட் மதாம் 19ஆம் திகதி மீன்பிடிக்கச்சென்ற நிலையிலேயே இவர்கள் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் திருகோணமலை கடற்கரைத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இம்மீனவர்களைஅவர்களது உறவினர்களிடத்தில் ஒப்படைத்ததாக கிழக்கு மாகணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் தெரிவித்தார்.
வாழைச்சேனை, பேத்தாளையைச் சேர்ந்த கணபதி சிவராசா(வயது 52), செல்லையா மனோகரன்(வயது 38) மற்றும் கணபதி சிவராசாவின் மகனான சிவராசா ஜீவராசா(வயது 20)ஆகிய மூன்று மீனவர்களுமே காணாமல் போயிருந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.
வாழைச்சேனை கடலிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இவர்களது படகு செயலிழந்து காற்றில் அடிபட்டுச்சென்ற நிலையில், வளைவுகுடா கடலில் வைத்து திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த டோரா படகு மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருகோணமலை கடற்கரையை வந்தடைந்த இம்மீனவர்களை திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணை செய்ததை அடுத்து அவர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியத்திடம் ஒப்படைத்த நிலையிலேயே அவர்கள் மூவரும் வீடு திரும்பியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’