சிசிவஞானசுந்தரம் கிருபானந்தன்
வை.சி. கிருபா....
அச்சுவேலி... சுவிஸ்.
.எதையும் சொல்ல முடியவில்லை!.. எழுதவும் முடியவில்லை!..
உன் இழப்பின் துயரத்தை எந்த சொற்களாலும் எழுத்துக்களாலும்
எவராலும் ஈடு செய்ய முடியாது...
புலம் பெயர் தேசமே அழுகின்றது.. புயலையும் எதிர்க்க
நீ எவரையும் நோகாத பூங்குரலாய் ஒலித்ததால்..
உன் சொற்கள் ஒவ்வொன்றும்... கருத்துக்கள் ஒவ்வொன்றும்..
எதிர் முரண்பாடு கொண்டவர்களையே ஏற்க செய்யும்...
அதுவே.. உன் கருத்துக்களின் வலிமை!..
அச்சம்.. அடங்குதல்.. ஒடுங்குதல்..
உண்மை எதுவென்று சொல்ல தயங்குதல்..
இவைகள் எவையுமே உன்னிடம் இருந்ததில்லை..
மாற்றுச்சிந்தனைகள் தோற்றுப்போய்விடுமோ என்ற
ஏக்கங்கள் நிலவிய சூழல் ஒன்றில்..
உண்மையை சொல்வதற்கான உயிரச்சம்
உனக்கெதிராகவும் எழுந்த பொழுதிலும்...
நீ.. மிடுக்குடன் எழுந்து நின்று நம்பிக்கை தரும்
வார்த்தைகள் சொன்னாய்..
இதுவே நடக்கும் என்றாய்.. இதை விட எதுவும்
நடக்காது என்று தூரப்பார்வையோடு விமர்சனம் சொன்னாய்..
நீ சொன்னதே நடந்தது!.. இனி இங்கு நடக்கப்போவதும்
நீயும் நாமும் சொன்னவைகளே..
துப்பாக்கிகளை விடவும் வெடி குண்டுகளை விடவும்
உயிர்த்துடிப்பான கருத்துக்களே வலிமையானவை என்பதை
ஒப்பித்து மெய்ப்பித்தவர்களின் பட்டியலில் நீயும் ஒருவன்..
கட்சி அரசியல் சார்ந்தவனாய் நீ இருந்ததில்லை.
சரியெது?.. தவறெது?.. என்றெண்ணி துடிப்புடன் எழுந்து
பொதுவான தளத்தில் நின்று பேசினாய்..
ஊடகங்களில் உண்மை உரைத்தாய்..
மனித நேயம்.. மானுட நீதி.. மனித குலத்தின்
தர்ம நியாயங்கள்.. .இவைகள் எல்லாம் வாழும் என்றாய்..
ஆனாலும்.. உன் இனிய வாழ்வு மட்டும்
கொடியதொரு திடீர் மரணத்தால் கொய்யப்பட்டு விட்டது..
உண்மை இன்னமும் இங்கு வாழ்கிறது
அது வாழும் வரை..
உன் ஞாபகங்களும் எம்மிடை வாசம் வீசும்..
எம் தேச வரலாற்றில் நீயும் ஒரு
அழியாத பதிவு..
இழப்பின் துயரத்தில் துடி துடிக்கும் குடும்பத்தினர்
உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்
எமது ஆறுதல் கரங்களை நீட்டி துயர் துடைக்கின்றோம்..
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - ஈ.பி.டி.பி
சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’