வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 அக்டோபர், 2010

ரிஷானா மனு நிராகரிப்பு

வுதி அரேபியாவில் குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நபீக்கின் மேன்முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அது உறுதி செய்துள்ளது.
தான் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குழந்தையை ரிஷானா கொலை செய்ததாக 2007 ஆம் ஆண்டில் டவாதமி உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
அதனை எதிர்த்து அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை தற்போது சவுதி உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளிக்கும் பட்சத்தில் மாத்திரமே ரிஷானா தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்று அவரது விவகாரங்களை கவனித்து வருகின்ற சமூக சேவகரான டாக்டர். துரத்துள் கிபாயா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ரிஷானா தற்போது டவாதமி சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த சனிக்கிழமை தான் அவரைச் சென்று பார்த்தபோது அவரது உடல்நிலை மற்றும் மனநிலை நன்றாக இருந்ததாகவும் டாக்டர் கிபாயா கூறியுள்ளார்.
ரிஷானா சவுதி செல்லும் போது ஒரு சிறுமியாக, பணிப்பெண்ணுக்கான வயதை எட்டாதிருந்ததாக கூறியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு உலக நாடுகள் சவுதி அரேபியாவை வலியுறுத்த வேண்டும் என்றும் ஒரு அறிக்கையில் கேட்டுள்ளது.
இதற்கிடையே, ரிஷானா நபீக்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த முடிவு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
ரிஷானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை சவுதி உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து இலங்கை ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’