வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 அக்டோபர், 2010

சிலி:சுரங்க மீட்பு திரைப்படமாகிறது

சிலி நாட்டில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நிலத்துக்கடியில் சிக்கியிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பப்ட்ட நடவடிக்கை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.நிலத்துக்கு கீழே அவர்களது வாழ்க்கை எப்படியிருந்தது என்பது குறித்த செய்திகளை, கதைகளை வெளியுலகுக்கு கூற வேண்டிஅவர்களுக்கு ஏகப்பட்ட அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.
சிலி நாட்டின் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், சுரங்கத்தில் அவர்கள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரையிலான பரபரப்பான விடயங்களைப் படமாக எடுக்கும் நடவடிக்கையில் ஏற்கனவே இறங்கிவிட்டார்.
இதையடுத்து அமெரிக்க திரையுலகமான ஹாலிவுட்டும் இத்தகைய நடவடிக்கையில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அரசியல் ஆதாயம்
முத்லில் மீட்கப்பட்டவருடன் அதிபர் பின்னேரா
முதலில் மீட்கப்பட்டவருடன் அதிபர் பின்னேரா

உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கிய இந்த நடவடிக்கையில், அரசியல் ரீதியாக பெருமளவில் ஒருவருக்கு வெற்றி கிட்டியது என்றால், அது சிலி நாட்டின் சுரங்கத்துறை அமைச்சரான லாரன்ஸ் கோல்பர்ண்தான்.
மூன்று மாதங்கள் முன்னர் வரை நாட்டில் பெரிதளவில் அறியப்படாத ஒரு அமைச்சராகவே அவர் இருந்தார். ஆனால் தற்போது நாட்டில் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக அவர் கணிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின் அடிப்படையில் 87 சதவீத மக்களின் ஆதரவு அவருக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும், நாட்டில் அதிபராக இருக்கும் செபாஸ்டியன் பின்னேராவுக்கு அடுத்தபடியாக அவர் அப்பதவிக்கு வருவார் என கூறப்படும் அளவுக்கு அவருக்கான ஆதரவை பெருகச் செய்துள்ளன.
இதே நேரம் இந்த மீட்பு நடவடிக்கையை அரசு சிறப்பாக கையாண்ட விதம் காரணமாக நாட்டின் அதிபர் பின்னேராவுக்கான ஆதரவும் அதிகரித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் ஐரோப்பாவுக்கு பயணமாகவுள்ள பின்னேரா அங்கும் இந்த வெற்றிக் களிப்பில் மிதப்பார் என்பது உறுதி.
சில சமயங்களில் இந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் வரும் உண்மைச் சம்பவ நிகழ்ச்சி அதாவது ரியாலிட்டி ஷோ போன்று இருந்தது.
மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கை
இந்தச் சுரங்கத் தொழிலாளர்கள் தொடர்பான ஒளிநாடாக்களை ஊடகங்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த ஒளிநாடாக்களை உலகெங்கும் பார்த்த மக்கள் நிலத்தடியில் அவர்களது வாழ்க்கை குறித்து ஆச்சரியமும் திகிலும் அடைந்துள்ளனர்.
இந்த ஒளிநாடாக்களின் கதாநாயகன் மரியோ செபுவீடா. அவர்தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மற்ற சுரங்கத் தொழிலாளர்களை பேட்டி காண்பது மற்றும், தொலைக்காட்சி குழுவினரை அவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளை செய்கிறார்.
கவர்ச்சிகரமாகவும், நகைச்சுவை உணர்வும் உள்ள மரியோவுக்கு, சிலியில் பல தொலைக்காட்சி நிறுவனங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’