உழவு இயந்திர உரிமையாளர்களும் தொழிலாளர்களும் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளுக்கு சாதகமான முறையில் அடுத்து வரும் மூன்று தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்.மாவட்டத்திலுள்ள உழவு இயந்திரங்கள் சிறு உழவு இயந்திரங்கள் (லாண்ட் மாஸ்ரர்கள்) ஆகியவற்றின் உரிமையாளர்கள் சாரதிகள் மற்றும் கல் உடைக்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நாட்டிலிருந்த அசாதாரண சூழ்நிலைகளால் சிவில் நிர்வாகம் இங்கு சரியாக இயங்க முடியாத நிலையில் தற்போது நிலமை மாறி சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சில சட்ட திட்டங்களுக்கு ஏற்றவாறே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உழவு இயந்திர உரிமையாளர்கள் சாரதிகள் மற்றும் கல்லுடைக்கும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாக வேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது. இருந்த போதிலும் நீங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நியாயமான சாதகமான முடிவு காணப்படுமென்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
அமைச்சர் அவர்களின் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பத்மதேவ ஆகியோரும் உடனிருந்தனர்.
இதில் 150 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’