வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 அக்டோபர், 2010

கனடாவிலிருந்து மீண்டும் வர புதிய கடவுச் சீட்டு கோரும் இலங்கையர்

னடாவிலுள்ள இலங்கை அகதிகள் தமது நாட்டுக்கு வருவதற்காகப் புதிய கடவுச் சீட்டு மற்றும் ஆவணங்களைக் கோரி வருவதாக, ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

கனடாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது, தமது அகதி ஆவணங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இவ்வாறு அகதி அந்தஸ்து கோரியவர்களில் 70 சதவீதமான இலங்கையருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்கள் மீண்டும் இலங்கை பயணிப்பதற்காகத் தமது ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி கனடாவில் அகதி அந்தஸ்து கோரியோர், மீண்டும் இலங்கை வருவதற்காக முயற்சி எடுக்கின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் கோரும் ஆவணங்களை தாம் வழங்கி வருவதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கணி வாகிஸ்வர குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’