வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 அக்டோபர், 2010

இலங்கைக்குக் கடத்த முயன்ற 550 கிலோ கடலட்டைப் பறிமுதல்

லங்கைக்கு கடத்த முயன்ற 550 கிலோ கடல் அட்டைகளை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஜப்பான், தைவான், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், கடல் அட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் கடல் அட்டைகளைப் பிடிக்கவும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
.இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கடல் அட்டைகளை இலங்கை வழியாகக் கடத்துகின்றனர். வனத்துறையினர் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தினாலும், கடல் அட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மண்டபம் வனத்துறையினர் நேற்று வடக்கு கடல் பகுதியில் வந்த வாகனத்தை சோதனையிட்டதில், 250 கிலோ கடல் அட்டைகள் சாக்குகளில் கட்டப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், பனைக்குளத்தைச் சேர்ந்த டிரைவர் காஜா மைதீனை (21) கைது செய்தனர். அதேபோன்று வேதாளை பகுதியில் வேனில் கடத்தப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளைப் பொலிஸார் பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’