பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
இதன்போது, இலங்கையின் மீள்குடியேற்றம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான விடயங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர். 
                      -
                    

  













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’