வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 அக்டோபர், 2010

மட்டக்களப்பில் முதலைகள் தொல்லை

லங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மீனவர்கள் மீன் பிடித் தொழிலுக்குச் செல்ல அச்சமடைந்த நிலை காணப்படுகின்றது.

சனிக்கிழமை அம்பிலாந்துறை வாவியோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரொருவர் முதலைக் கடிக்கு இலக்காகி காயமடைந்த அதே வேளை, காத்தான்குடி வாவியோரம் 12 அடி நீளமான முதலையொன்று மீனவர்களினால் வலை போட்டு பிடிக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டு அருகிலுள்ள மைதானமொன்றில் போடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் குறித்த வாவியோரம் மீனவரொருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை, முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதையடுத்து அப்பகுதி மீனவர்கள் உசாரடைந்த நிலையிலேயே, இந்த முதலை மீனவர்களினால் வலை போட்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
வன ஜீவராசிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலைகளைப் பிடிப்பதோ கொல்லுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை சுட்டிக் காட்டும் பொலிசார் இது வரை இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் எவரும் தங்களால் அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடுகின்றனர்.
காத்தான்குடி வாவியில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவர்களினால் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , இது சட்டத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளே இதில் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலந்தர் லெப்பை மொகமட் பரீட் கூறுகின்றார்.
இது தொடர்பாக கடந்த 11 ம் திகதி நடை பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ள போதிலும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இல்லை என கவலை வெளியிட்டுள்ள அவர், தாமதமின்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’