வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 அக்டோபர், 2010

முன்பள்ளிப் பிள்ளைகளின் சிறப்பான அடித்தளமே எதிர்காலச் சந்ததியின் வளமான வாழ்வாகும் - சந்திரகுமார் பா.உ

ளரும் பிள்ளைகளின் சிறப்பான அடித்தளமே எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் என ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த 9ம் திகதி கிளிநொச்சி மாவட்ட அரச செயலகத்தில் இடம்பெற்ற முன்பள்ளி அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் முன்பள்ளிகளின் செயற்பாடுகள் நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டியது அவசியமாகும். முன்பள்ளிகளே சமூகத்தின் நுழைவாயில்களாக காணப்படுகின்றன. எனவே அவற்றின் அபிவிருத்தியில் நாம் அதிக அக்கறை செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இச் சங்கத்தின் தலைவராக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு செல்வராஜா தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து இச்சங்கத்திற்கான ஆலோசனை சபை ஒன்று தெரிவு செய்யப்பட்டது. இதில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளடங்கியதான குழுவினர் அங்கத்துவம் வகிப்பர். இச் சங்கத்தின் காப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் செயற்படுவார்.
இச்சங்கமானது கிளிநொச்சி முன்பள்ளிகளின் பௌதீக அமைப்பு சிறுவர் உடல் உளநலவிருத்தி ஆசிரியர் பயிற்சி ஆசிரியர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு சுகாதார வழிகாட்டி என்பவற்றை ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட முன்பள்ளிகளின் சகல மட்ட அபிவிருத்திகளும் இச் சங்கத்தால் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனை அலுவலர் முன்பள்ளிப் பருவ உதவி கல்விப்பணிப்பாளர் கிளிநொச்சி உள்ளுராட்சித் திணைக்கள சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் கரைச்சி பிரதேச சபைச் செயலாளர் கிளிநொச்சி சுகாதார வைத்திய பணிமனை வைத்திய அதிகாரிகளான திரு கோபாலகிருஸ்ணன் திரு தீலீபன் பிரதேச மட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கச் செயலாளர்கள் கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளன பொருளாளர் திரு சு. மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’