வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 அக்டோபர், 2010

சரத்தின் எம்பி பதவி ரத்து : வர்த்தமானியில் இன்று அறிவிப்பு

ரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் இன்று வெளியிடப்பட்டுள்ளது
.அதேவேளை, தமது நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தாம் நாடாளுமன்றத்திற்குச் சென்று வாக்களிக்கவும், தமது சிறப்புரிமையையும், பாதிப்பின்மையையும் உறுதிப்படுத்தி தமக்கு இந்த அனுமதியை வழங்கவேண்டும் என அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
எனினும், அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதாக, நாடாளுமன்ற செயலாளர், தேர்தல் செயலாளருக்கு அறிவிக்கவிலை என்ற காரணத்தையும், சரத் பொன்சேகா தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்த வழக்கு இன்று எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தவிர அனோமா பொன்சேகா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையும், 25 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சரத்தின் இடத்துக்கு லக்ஷ்மன்

சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராச்சியின் பெயர் அச்சிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜே. வி. பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் அச்சிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது இந்த வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணையாளரினால் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’