வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 அக்டோபர், 2010

'சோதனைச் சாவடிகள் அகற்றப்படும்'

லங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள நிரந்தர வீதிச் சோதனைச் சாவடிகளை படிப்படியாக அகற்றப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பம்பலப்பிட்டியில் இருந்த நிரந்தர சோதனைச் சாவடி அகற்றப்பட்டுவிட்டதாகவும் ஏனையவையும் அவ்வாறு படிப்படியாக அகற்றப்படும் என்றும் இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சில வீதித்தடைகளை தாங்கள் அகற்றிவிட்டதாகவும், அண்மையில் பம்பலப்பிட்டியில் இருந்த ஒரு வீதித்தடையையும் தாங்கள் அகற்றிவிட்டதாகவும் கூறும் இராணுவப் பேச்சாளர், ஏனைய வீதித்தடைகளை அகற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.
நாட்டின் நிலவரம் இப்போது முற்றிலும் அமைதியாக இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறிய அவர், ஆகவே ஆங்காங்கு சோதனை செய்வதற்கான தேவை ஏற்படும் போது பயன்படுத்துவதற்காக சில வீதித்தடைகளை மாத்திரம் தொடர்ந்து பேணுவோம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் நிரந்தரச் சோதனைச் சாவடிகளுக்குப் பதிலாக நடமாடும் சோதனைச் சாவடிகளையும் தேவைப்படின் பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் சோதனைக் கமெராக்களை பொருத்தும் நடவடிக்கைகளையும் தாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’