இலங்கை அகதிகளின் அதிகளவான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவுள்ளதாக அஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் பிரண்டன் ஓ கோர்னர் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக, அதிகளவிலான இலங்கை அகதிகளின் புகலிட கோரிக்கை நிராகரிக்கபப்ட்டது. சட்டவிரோதமான முறையில் கடல் வழியை பயன்படுத்தி அஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சகல புகலிட கோரிக்கையாளர்களும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். எதிர்காலத்திலும், அதிகளவான இலங்கை புகலிட கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
புகலிட கோரிக்கைக்கான சரியான காரணங்களை முன்வைக்க தவறும் இலங்கையர்மீது இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறதென்றார். இதேவேளை, அஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக புதிதாக இரண்டு தடுப்பு முகாம்கள் அமைக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’