நாடு முழுவதிலும் கடற்றொழில் பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில் அதன் காரணமாக பாதிக்கப்படும் தமக்குரிய மாற்று ஏற்பாடுகள் குறித்து வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடல்வளத்தினை பாதுகாக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் நாடுமுழுவதும் இழுவைப்படகு மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் வடமராட்சியில் அதனைப்பயன்படுத்தும் சங்கமான வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது ஜீவனோபாய தொழில் குறித்து இச்சந்திப்பின்போது கலந்துரையாடினார்கள். இதன்போது சம்பந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சரவர்கள் கடற்றொழில் பாதுகாப்பு சட்டத்தினால் எவரும் பாதிக்கப்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்காதெனவும் பொருத்தமான மாற்று ஏற்பாடுகள் நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதுதொடர்பாக ஏனைய கடற்றொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய ஓர் சந்திப்பு நடாத்தப்படும் எனவும் தெரியப்படுத்தினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனான வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பில் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தர்மலிங்கம் வடமராட்சி கடற்றொழில் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் ஐயாத்துரை ரங்கேஸ்வரன் வடமராட்சி கரையோரப் பிரதேச பொறுப்பாளர் பொ.தெய்வேந்திரம் சிரேஷ்ட உறுப்பினர் சிறிபதி மாஸ்டர் மக்கள் சேவை பணிமனை இயக்குனர் சதீஸ் சட்டத்தரணி ரங்கன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’