முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர இன்று சபையில் தெரிவித்தார்
.சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு தொடர்பிலும் அவர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற போது வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சபையில் அதிருப்தி வெளியிட்டார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டியூ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சகல கைதிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தான் சரத் பொன்சேகாவுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு எவரும் விசேட தன்மையில் நோக்கப்படுவதில்லை. சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கைதிகள் என்ற சமத்துவம் அங்குள்ள அனைவருக்கும் பொதுவானது.
சரத் பொன்சேகா தொடர்பில் வைத்தியர்களின் ஆலோசனைகள் இருக்குமிடத்து அது குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.
மேலும் சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் உரிய பாதுகாப்பினை வழங்கியிருக்கின்றோம்" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’