வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 அக்டோபர், 2010

பேத்தியை வல்லுறவுக்கு உட்படுத்திய பாட்டன் கைது

னது பேத்தியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சிறுமியின் பாட்டன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த கெந்தேத்தவ பகுதியில் வசிக்கும் 11 வயதான சிறுமி ஒருத்தியே இவ்வாறு பாட்டனின் வல்லுறவுக்கு உட்பட்டுள்ளவராவார்
.குறித்த சிறுமியின் தந்தை, அவளின் தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதன் பின்னர் சிறுமி தனது தாயின் பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளாள். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் பாடசாலை சென்று திரும்பி, வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை, பாட்டன் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சிறுமி பயம் காரணமாக இவ்விடயத்தை வெளியில் யாரிடமும் சொல்லாது இருந்த நிலையில் இச்சம்பவத்தை அறிந்த அயல் வீட்டார் ஒருவர் இச்சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணை செய்யுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆனமடு பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட ஆனமடுவ பொலிஸார் குறித்த சிறுமியை விசாரித்ததில் அச்சிறுமி நடந்த விடயங்களை பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் பாட்டனைக் கைது செய்ததாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’