ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க மோசடி குற்றச்சாட்டொன்றின் காரணமாக நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி 10 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’