வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 அக்டோபர், 2010

குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட எழுவர் கைது

வாகரை காயகரனி பிரதேசத்தில் ஏழு மாதக் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற தாய் ஒருவர் உட்பட ஏழு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் தாயிடம் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து குழந்தை கிரான பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று சந்தேக நபர்களைப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

குழந்தை தொடர்ந்து வாகரை பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதோடு, கைது செய்யப்பட்டவர்கள் வாகரை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’