இலங்கையில் போர் முடிவுற்ற விதம் குறித்து முழுமையான விபரங்களை கொண்டிருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்துப் பிரஜைகளினதும் நலன்களை நோக்கிய திசையில் இலங்கை நகர்வதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான உதவிச் செயலாளர் பிலிப் ஜே கிரோவ்லி வாஷிங்டனில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
'இலங்கையின் 25 வருடகால யுத்தத்தின்போது குறிப்பாக கடந்த வருடம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நாவையும் அமெரிக்காவையும் கோரியுள்ளது. அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணைகள் தொடர்பாக ஏதாவது பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றனவா?' என பிலிப் கிரோவ்லியிடம் செய்தியாளர் ஒருவர் வினவினார்.
இதற்கு கிரோவ்லி பதிலளிக்கையில், "இந்த யுத்தம் முடிவடைந்த விதம் குறித்து முழுமையான விபரங்களை கொண்டிருக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்து தொடர்ந்தும் ஊக்குவித்து வருகிறோம். இது இலங்கையின் எதிர்காலத்துக்கு முக்கியமானது.
ஒரு தேர்தல் நடைபெற்றது. அத்துடன் இலங்கையின் இலங்கையின் பல்வேறு சமூகங்களையும் மீள ஒருங்கிணைப்பதை உள்ளடக்கக்கூடிய எதிர்காலத்தை நோக்கி இலங்கையை இட்டுச் செல்வதற்கு தேவையான அதிகார அமைப்பை இலங்கை அரசாங்கம் இப்போது கொண்டுள்ளது.
அத்துடன் அனைத்து மக்களினதும் நலன்களை நோக்கிய திசையிலும் நகர்கிறது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் விசேட பொறுப்பாளியாகுவதற்கான தகைமையைக் கொண்டுள்ளது" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’