வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 அக்டோபர், 2010

கொழும்பு- புத்தளம் புகையிரதச் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

பாலாவி புகையிரத நிலையத்திற்கருகில் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி வந்த அலுவலகப் புகையிரதம் தடம் புரண்டதில் பாதிக்கப்பட்டிருந்து புகையிரதச் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தளம் கொழும்பு புகையிரதச் சேவைகளுடன், புத்தளத்திலிருந்து சிலாபம் செல்லும் புகையிரதச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து மாலை 5.20 மணிக்கு புத்தளம் நோக்கிப் புறப்பட்ட அலுவலகப் புகையிரதம் வியாழக்கிழமை இரவு 9.15 மணியளவில் பாலாவி புகையிரத நிலையத்திற்கருகில் பாதையை விட்டு விலகி தடம் புரண்டது. இப்புகையிரதத்தின் என்ஜின் உட்பட இரு பிரயாணிகள் பெட்டிகளுமே இவ்வாறு தடம்புரண்டன.
இதன் காரணமாக நேற்று முழுதும் இப்புகையிரதப் பாதையில் புகையிரதச் சேவைகள் தடைப்பட்டிருந்தன. அத்துடன் கொழும்பிலிருந்து புத்தளத்திற்கான புகையிரதச் சேவைகளும் சிலாபம் பங்கதெனி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அதேவேளை தடம் புரண்ட பிரயாணிகள் பெட்டிகள் மற்றும் என்ஜின் என்பவற்றை மீண்டும் தண்டவாளத்தில் துக்கி வைக்கும் பணிகள் நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’