வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 அக்டோபர், 2010

கடற்படைத் தளபதி திசேர இந்தியா விஜயம்

லங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் திசேர சமரசிங்க இந்திய கொச்சின், தெற்கு கடற்படைத் தளத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்திய பாதுகாப்புச் அமைச்சர் ஏ.கே. அந்தனி, உயர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருடன் இவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்திய கடற்படைத் தளபதி நிர்மல் வர்மாவின் அழைப்பினை ஏற்று இலங்கைக் கடற்படைத் தளபதி திசேர சமரசிங்க எட்டு நாள் வியஜமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
கடற்படைத் தளபதியுடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இரு நாட்டு கடற்படையினருக்கும் ஏனைய பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த விஜயத்தை கருத முடியும் எனப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பொன்விழா நிகழ்வுகளிலும் கடற்படைத் தளபதி திசேர சமரசிங்க பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை தளபதி திசர சமரசிங்க இந்திய பாதுகாப்பு கல்லூரி கடற்படை பயிற்சி முகாம்களில் பயற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’