பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் 10 மில்லியன் ரூபா பெறுமதியான மரக்கன்றுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடப்படவுள்ள நிலையில் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இத்திட்டத்தின் கீழ் தேக்கு வேம்பு மலைவேம்பு மங்கூஸ்தான் கஸவலினா போன்ற மரக்கன்றுகள் நடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து நகர மற்றும் பிரதேச சபைகளினூடாக குப்பைகளை கூட்டெருவாக மாற்றும் திட்டம் தொடர்பிலும் இன்றைய தினம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இத்திட்டம் வெகுவிரைவில் நடைமுறைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பிரதேச செயலாளர் விவசாயத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் மற்றும் சுற்றுச் சூழல் இயற்கை வள அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’