வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 அக்டோபர், 2010

சிறுமியரை உரியவரிடம் ஒப்படைக்க மன்னார் மாவட்ட நீதிபதி உத்தரவு

ன்னார் முருங்கன் பகுதியிலுள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் மீது குறித்த நடத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்தை அடுத்து மேற்படி இல்லம் நேற்று மூடப்பட்டது.அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 18 சிறுவர்களில் 16 பேர் இன்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் 8 சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் 6 பேரை மன்னாரில் உள்ள பாதுகாப்பான சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைவாக சிறுமியர் ஒப்படைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் மன்னார் வைத்தியசாலையிலும் மற்றவர் அனுராதபுரம் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய போதகரை மன்னார் பொலிஸார் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’