தேசிய பாடசாலைகளைக் கண்காணிக்கவும், திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் 50 பேரடங்கிய குழு ஒன்றை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்துள்ளார்.
மேற்படி பரிசோதனைக் குழு ஒரு நாளைக்கு ஒரு தேசிய பாடசாலை என்றவாறு முன்னறிவித்தலின்றி விஜயம் செய்யுமெனக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வியின் கணியப் பெறுமானத்தைக் கூட்டுவதற்கு இப்படியான முயற்சிகள் தேவைப்படுவதுடன் ஆசிரியர் மாணவர்களது ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இது உதவுமென அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’