யாழ் போதனா வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
. யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பணிமனையில் இன்று மாலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது கடந்த மாதம் 27 ம்திகதி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஓர் மீளாய்வு கூட்டமாக அமைந்திருந்தது.
குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலைக்கென சிற்றூழியர்களை நியமித்தல் சுத்திகரிப்புச் சேவையின் குறைபாடுகள் சமையலறைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைப் பெற்றுக் கொள்ளல் சமையலறையில் விறகு உபயோகத்தைத் தவிர்த்து எரிவாயு பயன்படுத்துதல் பராமரிப்புப் பகுதி ஒன்றை ஏற்படுத்துதல் வெளிநோயாளர் பகுதியை நோயாளர்களது வசதி கருதி விரிவாக்குதல் விடுதி எழுதுநர்களுக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுக் கொள்ளல் வைத்தியசாலையின் பழைய பொருட்களை அகற்றுதல் தாதிய உத்தியோகஸ்தர்களுக்கான பற்றாக்குறை விடுதி வசதி வைத்தியசாலையின் மேலதிகத் தேவைகளுக்காக. காணி வசதியைப் பெற்றுக் கொள்ளல் அதிகாரிகளுக்கான வாகன வசதிகள் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் இன்னும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த மாத இறுதியில் ஒரு வார காலமாக தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொண்டதன் பயனாகவும் அங்குள்ள பல்வேறு தரப்பினருடன் நடத்திய கலந்துரையாடல்களின் மூலமும் மேற்படி தேவைகள் மற்றும் குறைபாடுகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா வைத்திய கலாநிதி ரவிராஜ் பிரதம கணக்காளர் விஜயரகுநாதன் தாதியர் சங்கப் பிரதிநிதிகள் தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’