வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 2 அக்டோபர், 2010

மட்டு. சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு த.தே.கூ.பிடம் கோரிக்கை

வ்வித விசாரணைகளுமின்றி மிக நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விசாரணையின்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
.இன்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கைதிகளைப் பார்வையிடச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் அரசியல் கைதிகள் இக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த அரியநேத்திரன் எம்.பி. இது தொடர்பாக பலமுறை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். ஆனால் விடுதலை தொடர்பாக ஆரோக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டபட்டதாக தெரியவில்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’