தமிழீழ அரசாங்கத்தை அமெரிக்கா எதிர்க்கவில்லை என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் வைகோ கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் தொடர்பான விசாரணைக்குழுவொன்றின் முன் சாட்சியமளிக்கையிலேயே வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டபோது அமெரிக்க அரசாங்கம் அதை எதிர்க்கவில்லை என வைகோ கூறினார்.
இந்திய உள்துறை அமைச்சின் உள்நாட்டு பாதுகாப்புப் பணிப்பாளர் பி.கே. மிஸ்ரா தனது வாதத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான நடத்தை தேசிய இறைமைக்கு மாத்திரமல்லாமல் உள்நாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகக்கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’