வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 அக்டோபர், 2010

பேருவளையிலிருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்களில் 4 பேர் உயிரிழப்பு

பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தினுஷா 2 என்ற ஆழ்கடல் மீன்பிடி படகில் 5 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி கடலுக்குச் சென்றனர். அவர்களில் 4 பேரை உயிரிழந்துள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மீன்பிடி படகு காணாமல் போனதாக கடந்த ஜூன் 16 ஆம் திகதி தகவல்கள் கிடைத்தன. இதனடிப்படையில் அமைச்சும் மீன்பிடி திணைக்களமும் சில நாடுகளில் உள்ள இலங்கை தூதரக அலுவலகங்களுக்கு தகவலை தெரியப்படுத்தியிருந்தன. இந்த படகு நேற்றைய தினம் மாலைத்தீவு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்தாக மாலைத்தீவில் உள்ள இலங்கை அதிகாரிகள் மீன்பிடி அமைச்சு தெரியப்படுத்தியிருந்தனர்.
படகு மீட்கப்பட்ட போது, அதில் ஒரு மீனவர் மாத்திரம் உயிருடன் இருந்துள்ளார். ஏனைய மீனவர்களில் உடல்களை மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் கடல் போட்டுள்ளதாக தெரியவருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட மீனவர் மாலைத்தீவு அதிகாரிகளினால் மாலோ நகருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மீனவரையும் மீன்பிடி படகையும் விரைவில் இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி அமைச்சு கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’