வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 5 அக்டோபர், 2010

இந்தியாவிடம் ஐந்து தங்கப் பதக்கங்கள்

டெல்லியில் நடைபெறும் 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போ்ட்டிகளின் இரண்டாவது நாளில் துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் திறமையை வெளிப்படுத்திய இந்தியர்கள், ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள்
இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் துப்பாக்கி சுடும் போட்டியில் கிடைத்துள்ளது.

ஆடவர் இரட்டையர் அணி பத்து மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவின் அபினவ் பிந்திரா மற்றும் ககன் நாரங் கொண்ட அணி 1193 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றனர்.
கடந்த முறை மெல்பர்ன் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 1189 புள்ளிகளோடு இவ்விருவரும் ஏற்படுத்தியிருந்த சாதனையை இப்போது இவர்களே முறியடித்துள்ளனர்.
இம்முறை உலக சாதனையாளர் ககன் நரங் 598 புள்ளிகளும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான அபினவ் பிந்திரா 595 புள்ளிகளும் பெற்றும் தங்கள் அணியின் மொத்த புள்ளிகளை 1193ஆக உயர்த்தியிருந்தனர்.

இந்தப் பிரிவில் இங்கிலாந்து வீரர்கள் வெள்ளிப் பதக்கமும் வங்கதேச அணியினர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
இந்திய மகளிர் அணியும் து்ப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றது.
ராஹி சர்னோபத் மற்றும் அனிஸா சயீத் ஜோடி, 25 மீட்டர் து்ப்பாக்கி சுடும் போட்டியில், 1156 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
ஆஸ்திரேலிய அணி வெள்ளிப் பதக்கமும், இங்கிலாந்து வெண்கலமும் வென்றது.
ஆடவருக்கான குழுப்பிரிவில், 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவின் தீபக் ஷர்மா, ஓம்கார் சிங் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இதில், சிங்கப்பூருக்கு தங்கமும், டிரினிடாட் டோபோக்கோ அணிக்கு வெண்கலமும் கிடைத்தது.
மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் பிரிவில், இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் மற்றும் லஜ்ஜகுமாரி கோஸ்வாமி ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
மல்யுத்தப் பிரிவில், மொத்தமுள்ள மூன்று பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்கள்.
இலங்கையின் சுதேஷ் பெய்ரிஸ், இந்த காமன்வெல்த் போட்டிகளில் தனது நாட்டுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார்.
62 கிலோ பளுதூக்கும் பிரிவில், 272 கலோ எடையைத் தூக்கி, வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். இதில், அவர் தேசிய சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’