வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 அக்டோபர், 2010

குற்றச்சாட்டுக்களேயில்லாத நிலையில் 8000 அரசியல் கைதிகளுடன் பொன்சேகா: ஐ.தே.க

குற்றச்சாட்டுக்களே இல்லாத நிலையில் 8000 அரசியல் கைதிகளை சிறை வைத்துள்ள அரசாங்கம் சட்டத்துக்கே முரணான சட்டங்களைப் பிரயோகித்து முன்னாள் இராணுவத் தளபதியையும் அரசியல் கைதியாக சிறைப்படுத்தியுள்ளது.
சரத் பொன்சேகா இன்று அரசியல் கைதி என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
சட்டம் ,ஒழுங்கு, மனித உரிமை ,ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி இல்லாத நாடாகவே இலங்கை இருக்கின்றது. இந்நிலையில் இங்கு முதலீடு செய்வதற்கென வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வருவார்களா? என்றும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

சட்டம், ஒழுங்கு இல்லாத நாடாகவே இலங்கை இருக்கின்றது. அரசாங்கத்துடன் இருக்கும்வரையில் யாருக்கும் எந்த சிக்கலும் கிடையாது. ஆனாலும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவோர் மீது முரணானதும் விரோதமானதுமான சட்டங்கள், பிரேயாகிக்கப்படுகின்றன. அந்த வகையில்தான் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு நடந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்டார் என்பதுவே அவர் மீது இருக்கின்ற பாரிய குற்றமாக அரசு நினைக்கின்றது.இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கும் கால அவகாசம் கொடுக்கவில்லை.
கொலையாளிக்கு வழங்கப்படுகின்ற நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கூடமேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது.ஆனால் பொன்சேகா விடயத்தில் எல்லாமே அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இந் நாட்டில் சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம், நல்லாட்சி இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
இன்று எமது நாட்டின் சிறைச்சாலைகளில் சுமார் 8000 பேர் அரசியல் கைதிகளாக இருக்கின்றனர். இவர்கள் மீது குற்றச்சாட்டுக்களும் இல்லை. விசாரணைகளும் இல்லை. இந்நிலையில் தான் முன்னாள் இராணுவத் தளபதி சரத்யபொன்சேகாவையும் சட்டத்துக்கு முரணான வகையில் அரசு சிறைக்குள் தள்ளியுள்ளது.
இங்கு அவர் அரசியல் கைதியாகவே இருக்கின்றார். இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு சர்வதேச குடியுரிமைச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் சட்டம் ஆகியவை மதிக்கப்படவில்லை. அனைத்தும் மீறப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில்தான் சரத் பொன்சேகா அரசியல் கைதி என்பதை இன்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.இவ்வாறானதொரு சூழல் இங்கு காணப்படும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவ்வாறு இலங்கைக்கு நம்பிக்கையுடன் வருவர் என்று கேட்கவிரும்புகிறோம்.
இந்நாட்டிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றோ அல்லது அவர்களது நிலைமைகளை விளங்கிக் கொள்வதற்கோ அரசாங்கம் தயாரில்லை. அதேபோல் அதற்கான தேவையும் அரசாங்கத்திடம் காணப்படுவதாகத் தெரியவில்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’