கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை 3 முன்னிலை சர்வதேச மனித உரிமை குழுக்கள் நிராகரித்துள்ளன.
மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடி விவகார குழு மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியனவே மேற்படி அழைப்பை நிராகரித்துள்ளன.
இது தொடர்பாக இவ்வமைப்புகள் கூட்டாக விடுத்த அறிக்கையில், இந்த ஆணைக்குழு போதிய ஆணையைக் கொண்டதல்ல. அதன்சுயாதீனத் தன்மை குறைவானது. மற்றும் பொறுப்புடைமை தொடர்பான நம்பகத்தன்மை குறைவாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இல்ஙகையில் உண்மையான அரசியல் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கான ஆணைக்குழு முன்னிலையில் அக்குழுவினர் சாட்சியமளிப்பர் எனவும் ஆனால் இந்த ஆணைக்குழுவான விசாரணைக் குழுவுக்குத் தேவையான குறைந்தபட்ச சர்வதேச தரநிலையைக் கொண்டிருக்கவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டின் போர்நிறுத்த உடன்படிக்கைக்கான தோல்விகளை ஆராய்வதற்hகும் யுத்தத்தன்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கும் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வருடம் மே மாதம் இவ்வாணைக்குழுவை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’