அநுராதபுரம் மாவட்டத்தின்  கெக்கிராவையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 6 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்
.கெக்கிராவை கலாகரம்பவேவ பிரதேசத்திலுள்ள காணியொன்றில்  இவர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பிரதேசவாசிகளிடமிருந்து  கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து குறித்து இடத்திற்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
தொல்பொருளியல் ரீதியில் பெறுமதியான பல பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இக்குழுக்கள் ஈடுபட்டிருந்தாக சந்தேகிக்கப்படுகிறது.
மற்றொரு சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு கெக்கிராவை பொலிஸாரினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’