ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தைக் குறிக்கும் முகமாக மர நடுகையில் புதிய கின்னஸ் சாதனை ஒன்றை நிலைநாட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா,
" ' தெயட்ட செவன ' எனப்படும் தேசிய மர நடுகை வேலைத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி 1.1 மில்லியன் மரங்கள் 11 நிமிடங்களில் நடப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.
மேலும் இதில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலை சிறார்கள் பங்கு பெறுவர்" எனத் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது 65 ஆவது பிறந்த நாளை வருகின்ற நவம்பர் மாதம் 18 ஆம் திகதி கொண்டாடவுள்ளார்.
அதனோடு அவரின் முதலாம் பதவிக்காலமும் நிறைவுக்கு வருகின்றது மேலும் அவர் தனது 2ஆவது பதவிக்காலத்திற்கான 19 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’