வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

புலிகள் இயக்க ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காளிமுத்து சர்மிலா என்ற சந்தேக நபர் 'நெஷனல் தமிழ் நெற்' எனும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாளராகப் பணியாற்றியதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
வடபகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதநேய நடவடிக்கைகளுக்கும் எதிராக சந்தேக நபர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டார் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
இச்சந்தேக நபர் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நாடியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’