வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் முப்படைத் தளபதிகள் மற்றும் ஏனைய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இன்று புதன்கிழமை மாலை சாட்சியமளித்துள்ளனர்.


கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இன்று மாலை இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசேரா சமரசிங்க மற்றும் விமானப்படத் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் சாட்சியமளித்தனர்.
வடபகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பிரசன்னமாகியிருந்தபோதிலும், அந்த சங்கம் இராணுவத்தினருக்கு எதிராக எந்தவித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்திருக்கின்ற நிலையிலும், பாரியளவிலான இராணுவத்தினர் வடபகுதியில் உள்ளனர். ஆனாலும், இவர்கள் படிப்படியாக குறைக்கப்படுவதுடன், சிவில் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’