வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 செப்டம்பர், 2010

யாழ். குடாநாட்டில் இராணுவ நிலைகள் அமைந்திருக்கும் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய நிலங்களை படிப்படியாக மக்கள் பாவனைக்கு வழங்க நடவடிக்கை.

யா ழ். குடாநாட்டில் இராணுவ நிலைகள் அமைந்திருக்கும் பொதுமக்களது குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மிதிவெடிகளை முற்றாக அகற்றி மிதிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டதனை உறுதிப்படுத்தி அதற்கான சான்றிதழ் பெற்று அப்பகுதிகளை பொதுமக்களின் பாவனைக்கு வழங்குவதென நேற்றைய தினம் பலாலி இராணுவ முகாமில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது
.மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைய அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களது ஏற்பாட்டில் நேற்று (28) பிற்பகல் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அவர்களும் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வுயர்மட்டக் கலந்துரையாடலின் போது பொதுமக்களினது குடியிருப்புப் பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் மிதிவெடிகளை அகற்றுவதை துரிதப்படுத்தி அப்பகுதிகளை பொதுமக்களின் பாவனைக்கு படிப்படியாக வழங்குவது தொடர்பாகவும் இவ்வாறு பொதுமக்களின் பாவனைக்கு விடப்படும் இடங்கள் எவை என்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு முதற்கட்டமாக மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் இடங்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டது.
இப்பகுதிகள் கிராம சேவையாளர் பிரிவுகள் வாயிலாக படிப்படியாக மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மிதிவெடிகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக யாழ். குடாநாட்டில் மிதிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டெனிஸ் ஹலோ ட்ரஸ்ட் யு.என்.டி.பி. ஆகிய தொண்டர் நிறுவனங்களின் உயரதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மேற்படி விடயம் தொடர்பில் வினவப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மிதிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர் நிறுவனங்களின் உயரதிகாரிகள் தற்போது மழைக்காலம் ஆரம்பமாகியிருப்பதால் மிதிவெடிகளை அகற்றுவதில் உள்ள சிரமங்கள் குறித்து விளக்கிக் கூறியதுடன் மழைக்காலம் முடிந்த பிறகு மிதி வெடிகளை அகற்றும் தங்களது பணி துரிதமாக்கப்படும் எனத்தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் தற்போது பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதால் அவர்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் அவர்களை மீளக்குடியமர்த்தி அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைவரும் முன்வந்து உழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’