கடவுச்சீட்டில் நாளை முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.ஏ.சுலானந்த பெரேரா தெரிவித்தார்
.அதன்படி A மற்றும் N என்ற தொடrர் இலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டைப் பெற வேண்டும்.
அதற்கு விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படுவதுடன் அதற்கென குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.
நாளை முதல் புதிய விண்ணப்பப் படிவ நடைமுறைக்கு அமுலுக்கு வருகிறது என பெரேரா தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
"A மற்றும் N தொடர் இலக்கம் கொண்ட கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் இரண்டு புகைப்படங்கள் கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது.
சமாதான நீதவானின் சான்று தேவையில்லை. அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரம் என்பன இணைக்க வேண்டிய அவசியமுமில்லை.
முதற் தடவையாக கடவுச் சீட்டு பெறவிரும்பும் ஒருவர், முன்பு போன்று உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’