வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாய உற்பத்திகளில் ஈடுபட முன்வர வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முறைமைகளுடன் மட்டும் நின்றுவிடாமல் நவீன தொழில் நுட்பங்களுடன் அத்துறையை மேற்கொண்டு சிறந்த பயன்களைப் பெற எமது விவசாய உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய சூழல் பாதுகாப்புடனான விவசாய உற்பத்தி எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் (18) யாழ் திருநெல்வேலி விவசாய வளாகத்தில் இடம்பெற்ற விவசாய விலங்கு வேளான்மைக் கண்காட்சி நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் எமது மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக எமது விவசாய உற்பத்தியாளர்களும் தங்களது பாரிய பங்களிப்பை வழங்குவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ் குடாநாட்டில் காணப்படுகின்ற தரிசு நிலங்கள் யாவற்றையும் எதிர்காலத்தில் விவசாய உற்பத்தி நிலங்களாக மாற்றுவதற்கு தான் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம் எதிர்வரும் பருவமழை காலத்திற்கு முன்பதாக யாழ் குடாநாடு முழுவதிலுமாக 10 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டத்தை தான் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இம் மரங்களை நட்டு பயன்பெற விரும்புபவர்கள் முன்வந்து சிறந்த பயன்களைப் பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
வட மாகாண விவசாய காணி கால்நடை அபிவிருத்தி மீன்பிடி நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் செ. பத்மநாதனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போக்குவரத்து பிரதி அமைச்சர் ரோஹன திஸாநாயக்க யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் அமைச்சர் அவர்களால் விவசாய விலங்கு வேளான்மை கண்காட்சி 2010 ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’