வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

மானிப்பாய் மெமோறியல் பாடசாலையின் நவோதய வார நிறைவு நாள் நிகழ்வு!

மா னிப்பாய் மெமோறியல் பாடசாலையின் நவோதய வார நிறைவு நாள் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்
.இன்றைய தினம் (23) நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சில்வேஸ்திரி அலென்ரின் உதயன் அவர்கள் இப் பாடசாலையின் வளர்ச்சியில் எமது அமைச்சரும் நானும் அக்கறையுடன் செயற்படுவதாகவும் இப் பாடசாலையின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்ய எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறினார்.
முன்னதாக பிரதம விருந்தினரை பாடசாலை பாண்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்புடன் மாணவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தேசிய கொடியை பிரதம விருந்தினரும் பாடசாலை கொடியை பாடசாலை அதிபரும் ஏற்றி வைத்தனர்.
கலை இலக்கிய விழா மாணவர்களின் நாட்டிய நாடகம் சிந்து நடைக்கூத்து கவிதை ஆகிய நிகழ்வுகளுடன் கலை நிகழ்வுகள் நிறைவு பெற்றது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’